×

கொரோனா கோரத்தாண்டவம் இன்னும் எத்தனை அலை வருமோ தெரியல?.. தொழிலதிபர்களுக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மும்பை: கொரோனா இன்னும் எத்தனை அலை வருமோ தெரியவில்லை என்று தொழிலதிபர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசினார். நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்துள்ள மாநிலமான மகாராஷ்டிராவில், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில தொழில் நிறுவனங்களான ஜே.எஸ்.டபிள்யூ, மஹிந்திரா, கோட்ரேஜ், பஜாஜ், ரிலையன்ஸ்,  டாடா, ப்ளூ ஸ்டார், எல் அண்ட் டி, இன்போசிஸ், கைனடிக் இன்ஜினியரிங்  ஆகியவற்றின் பிரதிநிதிகளிடம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில், மத்திய அரசின் முழு ஆதரவும் கிடைத்து வருகிறது. எதிர்காலத்தில் எத்தனை கொரோனா அலைகள் வரும் என்று சொல்ல முடியாது. கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால், தொழில்கள் மற்றும் வணிகங்கள் பாதிக்கப்படக்கூடாது. அதனால், தொழிலதிபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை அதற்கான திட்டமிடுதலையும், வசதிகளையும் உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களிலேயே சிறிய அளவிலான ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை தொடங்க வேண்டும்’ என்றார். முதல்வர் உத்தரவ் தாக்கரேயின் வேண்டுகோளின் பேரில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒட்டுமொத்த தொழில்துறையும் மாநில அரசுடன் ஒத்துழைப்பு நல்குவதாக கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் தெரிவித்தனர். …

The post கொரோனா கோரத்தாண்டவம் இன்னும் எத்தனை அலை வருமோ தெரியல?.. தொழிலதிபர்களுக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : wave ,Corona Korathandavam ,Utav Takare ,Mumbai ,Uttav Takare ,corona ,Udhav Takare ,
× RELATED உத்தரப்பிரதேசத்தில் இந்தியா...